விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த தரமற்ற - கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்

0 3069

கோவை திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் மீன் சந்தைகளில் ஆய்வு நடத்திய அதிகாரிகள், தரமற்ற மற்றும் கெட்டுப்போன நிலையில் விற்பனைக்கு வைத்திருந்த ஏராளமான மீன்களை பறிமுதல் செய்தனர்.

சமீபத்தில் மதுரை உள்ளிட்ட சில மீன் சந்தைகளில் தரமற்ற மற்றும் பார்மலின் ரசாயனம் கலந்த மீன்கள் விற்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து தமிழகம் முழுவதும் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மீன் வளத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

கோவையில் மீன் வளத்துறை மற்றும் உணவுத்துறை அதிகாரிகள் இணைந்து உக்கடம் மீன் சந்தையில் ஆய்வு நடத்தி, கெட்டுப்போன ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான 500 கிலோ மீன்களை பறிமுதல் செய்தனர். 

திருப்பூரில் பல்லடம் சாலையில் உள்ள தென்னம்பாளையம் மீன் சந்தையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கெட்டுப்போன நிலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 20 கிலோ மீன்களை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments