திருட்டு வழக்கில் வழக்குப்பதியாமல் இருக்க லஞ்சம் வாங்கிய 2 உதவி ஆய்வாளர்கள் கைது

திருவண்ணாமலையில் லேப்டாப் உள்ளிட்டவற்றுடன் பை திருடு போன சம்பவத்தில் வழக்குப்பதியாமல் இருக்க லஞ்சம் வாங்கியதாக 2 உதவி ஆய்வாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
ராஜராஜன் தெருவை சேர்ந்த அசோக்குக்கு சொந்தமான தனியார் பொருட்கள் பாதுகாப்பு அறையில், பக்தர் ஒருவர் லேப் டாப் உள்ளிட்ட பொருள்களுடன் வைத்த பை கடந்த மாதம் திருடு போனது.
இதில் அசோக் மீது வழக்குப்பதியாமல் இருக்க குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் இளஞ்செழியன், சிறப்பு உதவி ஆய்வாளர் அன்பழகன் ஆகியோர் லஞ்சம் கேட்டுள்ளனர்.
கடந்த மாதம் 15 ஆயிரம் ரூபாயை அசோக் கொடுத்ததாகவும், அப்போது மேலும் 10 ஆயிரம் ரூபாயை கேட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸில் அசோக் புகார் அளித்தார். அவர்கள் ஆலோசனையின்பேரில் 5 ஆயிரம் ரூபாயை அசோக் இன்று கொடுத்தபோது, இருவரையும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.
Comments