நடிகை விஜயலட்சுமி முன்வைத்துவரும் விமர்சனங்களுக்கு பதிலளிக்க சீமான் மறுப்பு

0 3317

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களை பார்த்து ஆறுதல் கூற சென்ற போது கெடாத சட்டம் ஒழுங்கு, விசாரணை ஆணையத்தில் ஆஜராக செல்லும் போது மட்டும் கெட்டு விடுமா என நடிகர் ரஜினிகாந்துக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

அக்கட்சியின் இணையதள பிரிவு நிர்வாகிகள் கூட்டம் சென்னை தாம்பரத்தில் நடைபெற்றது.

அதில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமானிடம், அவர் மீது நடிகை விஜயலட்சுமி தொடர்ந்து முன்வைத்து வரும் குற்றச்சாட்டுகள் மற்றும் விமர்சனங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளிக்க மறுத்த சீமான், கேள்விகளுக்கு மட்டுமே பதிலளிக்க முடியும், கேவலமானவற்றுக்கு பதிலளிக்க முடியாது என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments