கணவன் தூக்கி வீசிய வெட்டுக்கத்தி... மனைவியின் தலையில் சொருகிய பரிதாப நிலை

0 549

ஆந்திராவில் வீட்டு சாவி கொடுக்காததால் ஆத்திரத்தில் கணவன் வெட்டுக் கத்தியை தூக்கி வீசி தாக்கியதாக கூறப்படும் சம்பவத்தில், தலையில் சொருகி நின்ற கத்தியுடன் மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

நெல்லூர் மாவட்டம் தோட்டப்பள்ளியில் சேஷய்யா, ஜெயம்மாள் தம்பதி வசித்துவரும் நிலையில், வீட்டுக்கு பக்கத்தில் உள்ள மற்றொரு வீட்டின் சாவியை சேஷய்யா கேட்டதாகவும் ஜெயம்மா அதை கவனிக்காததால் ஆத்திரத்தில் வெட்டுக்கத்தியை தூக்கி வீசியதாகவும் கூறப்படுகிறது.

இதில் தலையில் வெட்டுக்கத்தி சொருகி நின்ற நிலையில் அக்கம்பக்கத்தினரால் மீட்கப்பட்ட ஜெயம்மாள், மேல்சிகிச்சைக்காக சென்னை அழைத்து வரப்பட்டுள்ளார். இது குறித்து சேஷய்யாவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில், நாயை விரட்டுவதற்காக வீசிய கத்தி, குறுக்கே வந்த மனைவியின் தலையில் விழுந்துவிட்டதாக விளக்கம் அளித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments