ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படம், இணைய தொடருக்கு தடைவிதிக்க கோரிய வழக்கில் புதிய உத்தரவு

0 631

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்படும் தலைவி திரைப்படம் மற்றும் குயின் இணையதள தொடருக்கு தடைவிதிக்க கோரிய ஜெ.தீபாவின் மேல்முறையீட்டு மனு மீது இயக்குனர் ஏ.எல்.விஜய், விஷ்ணுவர்தன் இந்தூரி, கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஏற்கனவே இது தொடர்பாக ஜெ.தீபா தாக்கல் செய்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனை எதிர்த்து ஜெ.தீபா மேல்முறையீடு செய்த நிலையில், அந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனு தொடர்பாக இயக்குனர் ஏ.எல்.விஜய், விஷ்ணுவர்தன் இந்தூரி மற்றும் கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் 2 வாரத்திற்குள் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments