பேருந்து நிலையத்திற்குள் திரும்ப முயன்ற அரசு பேருந்து - நூலிழையில் உயிர் தப்பிய இருவர்

0 755

கோவையில் அரசு பேருந்து வளைவில் திரும்ப முயன்ற போது, பக்கவாட்டில் வந்த இருசக்கர வாகனம் மீது மோதியதில், 2 பேர் நூலிழையில் உயிர் தப்பிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

நேற்று காந்திபுரம் பேருந்து நிலையத்திற்குள் பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று திரும்ப முயன்றது. அப்போது பக்கவாட்டில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் மீது பேருந்து மோதியது. நிலைத்தடுமாறி கீழே சரிந்த இருசக்கர வாகனம் பேருந்து சக்கரத்தில் சிக்கி சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், தலைகவசம் அணிந்திருந்ததால் பேருந்து சக்கரம் தலை மீது ஏறாமல் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மற்றொருவர் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டார். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments