ஆந்திராவில் பெண்கள், சிறுமிகளை பாதுகாக்க ‘திசா’ பெயரில் காவல் நிலையம்

0 603

ஆந்திராவில் பெண்கள் மற்றும் சிறுமிகளை பாதுகாக்க ‘திசா’ பெயரில் காவல் நிலையத்தை முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார்.

பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் கொடுமைக்கு ஆளாவதை தடுத்து நிறுத்த ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி திசா சட்டம் கொண்டு வந்து சட்டமன்றத்தில் நிறைவேற்றினார்.

அதற்காக தனி காவல் நிலையங்கள், தனி நீதிமன்றங்கள் மாநிலம் முழுவதிலும் உள்ள 13 மாவட்டங்களில் ஏற்படுத்தப்படும் என அறிவித்திருந்தார். அதன்படிஇ கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமுந்திரியில் முதல் திசா காவல் நிலையத்தை ஜெகன்மோகன் ரெட்டி திறந்து வைத்தார். அத்துடன் திசா செயலியையும் அவர் அறிமுகப்படுத்தினார்.

நிகழ்ச்சியில் பேசிய ஜெகன்மோகன், ஆந்திரா முழுவதும் 18 திசா காவல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ஒரு டி.எஸ்.பி. இரண்டு இன்ஸ்பெக்டர்கள் உள்பட மொத்தம் 52 பேர் இருப்பார்கள் என்றும் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments