விசாகப்பட்டினம் அடுத்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய நகரமாகும்- ஜெகன்மோகன்

0 324

விசாகப்பட்டினம் முதல் தரமான நகரம் என்று ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

ஆந்திராவின் தலைநகரை அமராவதியில் இருந்து விசாகப்பட்டினத்துக்கு மாற்ற அவர் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சித் தலைவரான சந்திரபாபு நாயுடு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

அடுத்த பத்து ஆண்டுகளில் விசாகப்பட்டினம் மிகச்சிறந்த தலைநகராக மாற்றப்படும் என்றும் ஹைதராபாத், பெங்களூர், சென்னை போன்ற நகரங்களுக்கு போட்டியாக விளங்கும் என்றும் ஜெகன்மோகன் தெரிவித்துள்ளார். அதற்கான அனைத்து உள்கட்டுமானங்களும் சிறப்பாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே தலைநகரை மாற்றும் முடிவைக கடுமையாக விமர்சித்துள்ள சந்திரபாபு, மூன்று தலைநகரங்கள் என்ற முடிவை கண்டு உலகமே சிரிப்பாய் சிரிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இப்பிரச்சினை தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்த தயாரா என்றும் ஜெகன்மோகனுக்கு சந்திரபாபு நாயுடு கேள்வி எழுப்பியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments