புதுச்சேரியில் விதிகளை மீறி விடுதி கட்டணம் வசூலித்ததாக புகாரில் 3 மருத்துவ கல்லூரிகளுக்கு நோட்டீஸ்

0 105

புதுச்சேரியில் விதிகளை மீறி விடுதி கட்டணம் வசூலித்ததாக எழுந்த புகார் தொடர்பாக விளக்கம் அளிக்க 3 தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் சென்டாக் மூலம் மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. சில தனியார் கல்லூரி நிர்வாகங்கள், தங்கள் கல்லூரிகளில் பயிலும் விடுதி மாணவர்களிடம், கூடுதலாக 9 லட்ச ரூபாய் வரை கட்டணம் வசூலிப்பதாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடியிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து இந்த புகார் தொடர்பாக ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவகக்கல்லூரி, கனகசெட்டிக்குளம் பிம்ஸ் மருத்துவ கல்லூரி உள்ளிட்ட 3 கல்லூரிகளுக்கு சுகாதாரத்துறை இணை செயலர் சாரதி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும் இன்று மாலை 5 மணிக்குள் கல்லூரி நிர்வாகங்கள் விடுதி கட்டணம் குறித்து உரிய விளக்கம் அளிக்க தவறினால் மருத்துவ கவுன்சில் விதிமுறைப்படி அத்தியாவசிய சான்று திரும்ப பெறப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments