ஆந்திராவில் 1ம் தேதி முதல் பென்சன் வீடு தேடி வழங்கும் திட்டம்

0 551

ஆந்திராவில் சமூக பாதுகாப்பு திட்டங்களில் கீழ் வருகிற 1-ந்தேதி முதல் வீடு தேடி நிதி உதவி வழங்கப்படுகிறது.

வருகிற 1-ந்தேதி முதல் பென்சன் வீடு தேடி வழங்கும் திட்டத்தை தொடங்க உள்ளார். இந்த திட்டத்தின் மூலம் மொத்தம் 54 லட்சத்து 64 ஆயிரம் பேர் பயன் பெற உள்ளனர்.
இத்திட்டம் தொடர்பாக முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி நேற்று முதன்மை செயலாளர் நீலம் சஷ்னி, டி.ஜி.பி. கவுதம் சவால் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இவர்களுக்கு புதிய பென்சன் கார்டுகள் மற்றும் அரிசி அட்டைகளை வழங்கவும் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

இதே போல ஏழைகளுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கும் திட்டத்தையும் வருகிற 1-ந்தேதி முதல் தொடங்க உள்ளார். இந்த திட்டத்தில் பயன் பெறும் பயனாளிகளின் விவரங்களை கிராம அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் எனவும், அவர் அறிவுறுத்தி உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments