மாநில தேர்தல் ஆணையரின் நியமனத்தை ரத்து செய்தது குறித்து பதிலளிக்க ஆளுநர் கிரண்பேடிக்கு உத்தரவு

0 343

புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையரின் நியமனத்தை ரத்து செய்தது குறித்து பதிலளிக்க, துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் பாலகிருஷ்ணன் என்பவரை, மாநில தேர்தல் ஆணையராக புதுச்சேரி அரசு நியமித்தது. ஆனால், அகில இந்திய அளவில் விண்ணப்பங்களை பெற்றுதான் தேர்தல் ஆணையரை நியமிக்க வேண்டும் என கூறி, ஆளுநர் கிரண்பேடி அவரது நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதை எதிர்த்தும், ஆளுநரின் உத்தரவை ரத்து செய்ய கோரியும், உள்ளாட்சித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், இதுதொடர்பாக ஆளுநர் அலுவலகம் விளக்கமளிக்க உத்தரவிட்டு வழக்கை வரும் 31-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments