திடீரென தீப்பிடித்து எரிந்த அரசு பேருந்து

0 441

கோவை மாவட்டம் கவுண்டம்பாளைம் பணிமனையில் இருந்து வெளியே வந்த அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான சொகுசு பேருந்து ஒன்று மின்கசிவு காரணமாக கொளுந்து விட்டு எரிந்து சேதமடைந்தது.

கவுண்டம்பாளையத்தில் உள்ள தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனையில் பேருந்துகளை பராமரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பணிமனையில் இருந்து வெளியே புறப்பட்ட சொகுசு பேருந்தின் என்ஜின் பகுதியில் திடீரென புகை வருவதை கண்ட ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தியுள்ளார். அடுத்த சிமிடங்களில் பேருந்தில் தீப்பற்றி கொளுந்து விட்டு எரிந்தது.

இதையடுத்து அங்கு விரைந்த கோவை வடக்கு தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு பேருந்தின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments