உட்கட்சி பிரச்சனைகளுக்கு அவசர ஆப்ரேஷன் தேவை - மு.க.ஸ்டாலின்

0 251

உள்ளாட்சி தேர்தலில் ஒருசில இடங்களில் தொய்வும் சுணக்கமும் ஏற்பட்டதற்கு உட்கட்சி பிரச்சனை இருப்பதாக கூறப்படும் நிலையில் அவசர ஆப்ரேஷன் தேவை என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிவிப்பில், கட்சிக்குள் நடைபெறும் இது போன்ற பிரச்சனைகளை தீர்க்க நிர்வாகிகள் முயற்சிக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். ஒரு சில பிரச்சனைகளை தலைமையால் தான் தீர்க்க வேண்டுமென்றால், அதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சூசகமாக தெரிவித்துள்ளார்.

அதேநேரம், தனிமனிதனின் விருப்பு வெறுப்பு மற்றும் சுயநலத்தை விட இயக்கத்தின் வெற்றியே முக்கியம் என்றும், தனிப்பட்ட முறையில் ஒருசிலர் தவறு செய்தால் அவர்களை காப்பாற்ற முயற்சிக்க கூடாது எனவும் எச்சரித்துள்ளார். மேலும், உள்ளாட்சி தேர்தலில் வெற்றிப்பெற்ற புதியவர்களுக்கு கற்றுத்தர வேண்டும் எனவும், அவர்களை அடிமைகளாக நடத்திட கூடாது என்றும் கழக நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments