இரும்புத்திரை படத்திற்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

0 1124

டிஜிட்டல் இந்தியா திட்டம் குறித்து தவறான கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதால் நடிகர் விஷால் நடித்த "இரும்புத்திரை" படத்திற்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இரும்புத்திரை படத்தில் ஆதார் அடையாள அட்டைக்காக வழங்கப்படும் தகவல்கள் தவறாக பயன்படுத்தபடுவதை போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறி, நாமக்கல் மாவட்டம் தத்தியாபுரத்தை சேர்ந்த நடராஜன் என்பவர் பொதுநல வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் பார்த்திபன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தணிக்கை குழுவிடம் சான்றிதழ் பெற்று வெளியாக உள்ள இந்த படம் குறித்து படம் வெளிவரும் முன்னரே மனுதாரர் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளை ஏற்க முடியாது என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments