CCTV பதிவுகளில் முறைகேடு செய்யப்படாது என உத்தரவாதம் அளிக்க முடியுமா? தேர்தல் ஆணையத்திற்கு கேள்வி

0 275

ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவு செய்யப்பட்ட சிசிடிவி பதிவுகளில் முறைகேடு செய்யப்படாது என, உத்தரவாதம் அளிக்க முடியுமா என மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கு மீண்டும் விசாரணக்கு வந்தபோது, மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், ஆய்வு செய்வதற்காகத்தான் தேர்தலில் சிசிடிவி கேமரா பயன்படுத்தப்பட்டதாகவும், தற்போது வரை ஆய்வுக்கு உட்படுத்தவில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும், சிசிடிவி பதிவுகள் மாவட்ட ஆட்சியர்கள் கட்டுபாட்டில் இருப்பதாகவும், அதில், முறைகேடு நடத்த வாய்ப்புள்ளதா என அவர்களிடம் விளக்கம் பெற வேண்டும் எனவும் தெரிவித்தார். இதனையடுத்து வழக்கு விசாரணையை ஜனவரி 28-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments