இரவு நேரங்களில் வீடுகளை நோட்டமிடும் நபர்

0 866

கோவை கவுண்டம்பாளையம் சுற்று வட்டாரங்களில் இரவு நேரங்களில் ஒரு நபர் வீடுகளை நோட்டமிடும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன.

கவுண்டம்பாளையத்தில் உள்ள மருதம் நகர், பாரதி காலனி உள்ளிட்ட இடங்களில் இரு சக்கர வாகனத்தில் வரும் நபர், வீடுகளின் சுவர் ஏறி குதித்து ஜன்னல்கள் வழியாக நோட்டம் விடும் காட்சிகள் சி.சி.டி.வி.க்களில் பதிவாகியுள்ளன.

இதனால் தங்கள் வீடுகளில் கொள்ளையர்கள் நுழைந்து விடக் கூடும் என அச்சம் அடைந்துள்ள இப்பகுதி மக்கள் இது தொடர்பாக துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments