உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமை அறிவுறுத்தியும் சில பகுதிகளில் காங்.-க்கு இடம் வழங்கப்படவில்லை

0 380

உள்ளாட்சித் தேர்தலில், திமுக தலைமை அறிவுறுத்தியும் சில பகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு இடம் வழங்கப்படவில்லை என்றும் இதற்கு அந்தந்த மாவட்டத்தில் இருப்பவர்கள் தான் காரணம் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்தப்பின்னர் சென்னை திரும்பிய அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது இதனைத் தெரிவித்தார். அப்போது, திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி மேலிட தலைவர்களிடையே சுமூகமான உறவு நீடிப்பதாகவும், இரண்டு கட்சியிலும் கீழ் நிலையில் இருப்பவர்களுக்கு பல சிரமங்கள் உள்ளதாகவும் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments