உத்தரபிரதேச மாநிலத்தில் அகதிகளுக்கு குடியுரிமை வழங்க நடவடிக்கை

0 172

குடியுரிமை திருத்த சட்டத்தின் படி உத்தரபிரதேச மாநிலத்தில் குடியுரிமை வழங்குவதற்காக 32 ஆயிரம் அகதிகள் கண்டறியப்பட்டுள்ளதாக அந்த மாநில அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்த போவதாக முதன் முதலில் அறிவித்த உத்தரபிரதேச அரசு மாநிலத்தில் குடியேறியுள்ள அகதிகளை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டது.

இதுகுறித்து அந்த மாநில மின்சாரத்துறை அமைச்சர் ஸ்ரீகாந்த் சர்மா இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், உத்தரபிரதேச மாநிலத்தில் அகதிகளாக குடியேறியவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்காக அடையாளம் காணும் பணி நடைபெற்று முடிந்துள்ளது என்றார்.

மொத்தமுள்ள 75 மாவட்டங்களில் 21 மாவட்டத்தில் இந்த பணி நடைபெற்றதாகவும், இதில் முதல் கட்டமாக 32 ஆயிரம் அகதிகள் கண்டறியப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments