பிரதமர் மோடியின் முயற்சியாலேயே ஜல்லிக்கட்டு தடையின்றி நடந்துவருகிறது-ஹெச்.ராஜா

0 454

பிரதமர் மோடியின் சீரிய முயற்சியாலேயே தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு தடையின்றி நடந்துவருவதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராயநகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் அக்கட்சியினர் சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர், இல. கணேசன், குடியுரிமை சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நடத்திய கூட்டத்தில், திமுக கலந்து கொள்ளாதது மகிழ்ச்சியே என தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஹெச். ராஜா, 2011ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், காளைகளை காட்சி விலங்குகள் பட்டியலில் சேர்த்ததாலேயே, ஜல்லிக்கட்டு நடத்த சிக்கல் உருவானதாக சுட்டிக்காட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments