டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் பனிமூட்டம்

0 340

டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில், கடுங்குளிருடன் பனிமூட்டம் நிலவுவதால், ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தலைநகரில், இன்று காலை 8 டிகிரி செல்சியஸ் அளவிற்கு, தட்பவெப்பம் பதிவானது.

கடுமையான பனிமூட்டம் நிலவுவதன் காரணமாக, ரயில்களுக்கான சிக்னல்கள் தெளிவாக தெரியவில்லை. இதனால், டெல்லி வந்து செல்லும் 15 எக்ஸ்பிரஸ் ரயில்கள், 2 மணி நேரம் முதல், 5 மணி நேரம் வரையில் காலதாமதமாக இயக்கப்படுகின்றன.

டெல்லி, உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில், அடுத்த சில நாட்களுக்கு, கடும் பனிமூட்டம் தொடரும் என கூறியிருக்கும் இந்திய வானிலை மையம், ஜம்மு-காஷ்மீர், இமாச்சல் பிரதேசத்தில் பனிப்பொழிவு கடுமையாக இருக்கும் என்றும் தெரிவித்திருக்கிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments