5, 8 ஆம் வகுப்புகளுக்கு மாதிரி வினாத்தாள் வெளியிடப்படாததால் குழப்பம்

0 232

பொதுத்தேர்வு எழுத உள்ள 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு மாதிரி வினாத்தாள் வெளியிடப்படாததால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. 

இந்த ஆண்டு மார்ச் 30ஆம் தேதி முதல் பொதுத் தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் கேள்விகள் ஒரு மதிப்பெண் வினாக்களாக கேட்கப்படுமா அல்லது வேறு வடிவில் கேட்கப்படுமா என சந்தேகம் எழுந்துள்ளது.

இதற்கிடையில் சில மாவட்டங்களில் ஆசிரியர்கள் தாங்களே தயாரித்த மாதிரி வினாக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதனால் சரியான வினாத்தாள் வடிவம் எதுவெனத் தெரியாமல் மாணவர்களும், ஆசிரியர்களும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

முதல் முறையாக பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் குழப்பத்தைத் தீர்க்கும் வகையில், மேல்நிலை வகுப்புகளுக்கு வெளியிட்டுள்ள மாதிரி வினாத்தாள்களை போன்று 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கும் பள்ளி கல்வித்துறை வெளியிட வேண்டும் என ஆசிரியர்கள், மாணவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments