சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் விசாரணை அதிகாரி நியமனம்

0 306

குமரி மாவட்டம் களியக்காவிளையில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில், விசாரணை அதிகாரியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து மதுரை மாவட்ட அமலாக்க பிரிவு கண்காணிப்பாளரான ராஜராஜன், குமரி மாவட்ட கண்காணிப்பாளர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக நெல்லை மேலப்பாளையத்தைச் சேர்ந்த கோழிக்கடை அதிபர் பிஸ்மி நவ்ஷாத் மற்றும் தென்காசி ஹனிபா ஆகியோரிடம் நெல்லை சரக டி.ஐ.ஜி பிரவின் குமார் அபினபு தலைமையிலான தனிப்படையினர் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருவதாக போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதில் ஹனிபா என்பவர் தென்காசி இந்து முன்னணி பிரமுகர் குமார்பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments