ரேசன் கடைகளில் இன்றும் பொங்கல் பரிசு தொகுப்பு

0 259

பொங்கலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமையான இன்றும் ரேசன் கடைகளில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுவருகிறது.

மக்கள் வரிசையாக நின்று, ஆர்வத்துடன் பொருள்களை வாங்கிச் செல்கின்றனர். 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, கரும்புத்துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ஆகியவை பரிசு தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

இவற்றுடன் 1,000 ரூபாய் பணமும் வழங்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் இதுவரை சுமார் 85 சதவிகிதம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு நாளை வரை மட்டுமே பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments