ஜல்லிக்கட்டுப் போட்டியை பாதுகாப்பாக நடத்துவது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

0 171

ஜல்லிக்கட்டு போட்டியை பாதுகாப்பாக நடத்துவது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த திருப்பதி என்பவர் தாக்கல் செய்த மனுவில், காளைகள் மற்றும் உரிமையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வாடிவாசலுக்கு முன்பாக ஒழுங்குப்படுத்த குழு அமைக்க கோரிக்கை விடப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஜல்லிக்கட்டு போட்டியை பாதுகாப்பாக நடத்த உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக அரசுத்தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில் கடந்த ஆண்டை போல இப்பொழுதும் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஜல்லிக்கட்டு நடத்த உத்தரவிட வேண்டுமென வாதிடப்பட்டது.

இதையடுத்து ஜல்லிக்கட்டு போட்டியை பாதுகாப்பாக நடத்த மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைத்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments