கிராமிய பாடகர் புஷ்பவனம் குப்புசாமியின் மூத்த மகளை காணவில்லை எனப் புகார்

0 991

பிரபல கிராமிய இசைப்பாடகரும் சினிமா பின்னணி பாடகருமான புஷ்பவனம் குப்புசாமியின் மூத்த மகளை காணவில்லை என போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

புஷ்பவனம் குப்புசாமி - அனிதா குப்புசாமியின் மூத்த மகள் பல்லவி எம்.பி.பி.எஸ்  படித்துள்ளார். அவரை ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணி முதல் காணவில்லை என உறவினர் சார்பில் அபிராமபுரம் காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

புகாரில் இரவு அவருக்கும் அவரது தங்கைக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதாகவும் அதில் கோபமடைந்த அவர், வீட்டிலிருந்த காரை எடுத்துக் கொண்டு வெளியே சென்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. புகாரைப் பெற்றுக்கொண்ட காவலர்கள், அவரது வீடு அமைந்திருக்கும் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். 

Watch Polimer News Online: https://polimernews.com/dlive-tv

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments