உள்ளாட்சி தேர்தலுக்கு மாவட்ட வாரியாக தேர்தல் பணிப் பொறுப்பாளர்கள் - திமுக அறிவிப்பு

0 229

உள்ளாட்சித் தேர்தலுக்கு மாவட்ட வாரியாக தேர்தல் பணிப் பொறுப்பாளர்களை திமுக அறிவித்துள்ளது.

வரும் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய நாட்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக மாவட்ட வாரியாக "தேர்தல் பணி பொறுப்பாளர்" நியமிக்கப்படுவதாக திமுக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது. 

மாவட்டங்களில் நடைபெற வேண்டிய தேர்தல் பணிகளைத் கவனித்திட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

46 கட்சி மாவட்டங்களுக்கு தேர்தல் பொறுப்பாளர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இதேபோல, உள்ளாட்சி தேர்தலுக்காக சட்ட ஆலோசனைக் குழுவையும் திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

Watch Polimer News Online: https://www.polimernews.com/dlive-tv

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments