கூ.....சிக்குபுக்கு....! 164 வயது நீராவி ரயிலின் உற்சாக பயணம்

0 160

சென்னையில் 164 ஆண்டுகள் பழமையான நீராவி என்ஜின் பொருத்தப்பட்ட ரயில் எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து கோடம்பாக்கம் வரை இயக்கப்பட்டது. புகையைக் கக்கியவாறு விசில் சத்தத்துடன் நகர்ந்து சென்ற ரயிலை முந்தைய தலைமுறை முதல் இன்றைய தலைமுறையினர் வரை சிலிர்ப்புடன் கண்டுகளித்தனர். 

குயில் கூவுவது போல விசில் பறக்க இயல்பு மாறாமல் தண்டவாளத்தில் ஊர்ந்து செல்லும் இந்த நீராவி இஞ்சினின் பெயர் பேரி குயின் ((Fairy Queen)) 1855 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டு அப்போதைய கிழக்கு இந்திய ரயில்வே நிறுவனத்திற்காக இந்தியா கொண்டுவரப்பட்டது இந்த பேரிகுயின் இ.ஐ.ஆர் 21.

55 ஆண்டுகள் மக்கள் பயன்பாட்டிற்கு பிறகு 1909 ஆம் ஆண்டு முதல் ஓய்வு பெற்றாள் பாரி குயின். ஜமால்பூர் ரயில்வே அருங்காட்சியகத்தில் காட்சிப் பொருளாக வைக்கட்டிருந்த பேரிகுயின் கடந்த 2010 ஆண்டு சென்னை கொண்டு வரப்பட்டு புத்துயிர் பெற்றது.

நிலக்கரியை எரிபொருளாக பயன்படுத்தி நீராவி மூலம் இயங்கும் இந்த ரக நீராவி இன்ஜின் தமிழகத்தில் சென்னை, திருச்சி மற்றும் நீலகிரியில் மட்டுமே உள்ளது.

நீலகிரியில் இன்றளவிலும் நீராவி இன்ஜின் பயன்பாட்டில் இருந்தாலும், உலகில் இயங்கும் அதிக வயதான ரயில் இன்ஜின் என்ற பெருமை சென்னையில் உள்ள பாரி குயின் இ.ஐ.ஆர் 21க்கு மட்டுமே உண்டு.

பாரம்பரியமிக்க இந்த ரயில் இன்ஜினை பராமரிப்பதும், அதற்கான பாகங்களை உருவாக்குவதும் கடினம் என்றாலும் அதனை பெருமையாக செய்து வருகிறது தெற்கு ரயில்வே.

எத்தனை ரயில்களை இயக்கினாலும் இந்த பழமையான நீராவி இன்ஜினை இயக்குவதை பெருமையாகவும் பரவசமாகவும் உணர்கின்றனர் லோகோ பைலட்கள்.

கடந்த பத்து ஆண்டுகளாக ஆண்டிற்கு ஓரிரு முறை மட்டுமே இயக்கப்பட்டு வரும் இந்த ரயில், சனிக்கிழமை வர்த்தக ரீதியில் இயக்கப்பட்டது. இதில் பயணம் செய்ய இந்தியர்களை காட்டிலும் வெளிநாட்டவர்களே அதிக ஆர்வம் காட்டினர்...

பாரம்பரியம் மிக்க இந்த ரயிலினை வர்த்தக நோக்கத்திலேனும் அதிக முறை இயக்க வேண்டும் என்பதே எல்லோரது விருப்பமாக இருக்கிறது.

Watch Polimer News Online: https://polimernews.com/dlive-tv

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments