டெல்லி சட்டமன்றத் தேர்தல்: வரும் 22ம் தேதி முதல் சூறாவளிப் பிரச்சாரம் செய்ய பிரதமர் மோடி திட்டம்

0 230

டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்காக, வரும் 22ம் தேதி முதல் பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொள்கிறார். 

சட்டப்பூர்வமற்ற காலனிகளில் குடியிருப்போருக்கான வீடுகள் அவர்களுக்கே வழங்கப்படும் என்று அறிவித்து அதற்கான சட்டத்தை கடந்த மாதம் நாடாளுமன்றம் இயற்றியது. இதனால் பல ஆயிரம் குடும்பங்கள் பயன் பெற்றுள்ளன.

கடந்த 20 ஆண்டுகளாக டெல்லியில் ஆட்சியை கைப்பற்ற முடியாத பாஜக இந்த முறை ஆட்சியைக் கைப்பற்ற தீவிரமான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த முறை பாஜகவின் வெற்றி வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியாக இருக்கும் என்று அக்கட்சியின் டெல்லி தலைவர் மனோஜ் திவாரி உறுதி படத்தெரிவித்தார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 67 தொகுதிகளை கைப்பற்றிய நிலையில்,பாஜக 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments