2020 பொது பட்ஜெட் பிப்ரவரி 1-ல் தாக்கலாக வாய்ப்பு

0 254

2020ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் பிப்ரவரி மாதம் 1ம் தேதி தாக்கலாக வாய்ப்பிருப்பதாக மத்திய நிதியமைச்சக வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

மத்தியில் மோடி தலைமையிலான பாஜக அரசு அமைந்த பிறகு 2017ம் ஆண்டு முதல் பொது பட்ஜெட் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், அடுத்த ஆண்டுக்கான பொது பட்ஜெட் பிப்ரவரி 1ம் தேதி தாக்கலாக வாய்ப்பிருப்பதாக நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதேபோல் பொருளாதாரஆய்வறிக்கை ஜனவரி 31ம் தேதி தாக்கலாக வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments