கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ரயில்வே ஊழியர்களுக்கு பிரான்ஸ் அரசு வேண்டுகோள்

0 184

பிரான்சில் கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு வேலை நிறுத்தத்தை நிறுத்தி வைக்குமாறு அந்நாட்டு ரெயில்வே நிர்வாகம் ஊழியர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

அந்நாட்டில் ஓய்வூதிய வயது வரம்பு 62 இல் இருந்து 64 ஆக உயர்த்தப்பட்டது, சேவைக்காலத்தை பொறுத்து ஓய்வூதியத்தின் தொகை மாறுபடுதல், ஓய்வூதியத்தை 64 வயதுக்கு முன்னதாக கோரினால் ஓய்வூதிய தொகை வேறுபடுதல் என பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டதால் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 9 நாட்களாக நடந்து வரும் தொடர் போராட்டத்தினால் பிரான்ஸ் நாடு ஸ்தம்பித்துள்ளது.

இந்நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை நாட்களை முன்னிட்டு போராட்டத்தை இடைநிறுத்தம் செய்ய வேண்டும் என பிரான்ஸ் தேசிய ரெயில்வே நிறுவன தலைவர் ஜீன் பியரே பரண்டாவ் தெரிவித்துள்ளார்.

Watch Polimer News Online: https://www.polimernews.com/dlive-tv

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments