தேர்தலை நாடி எதிர்கொள்கின்ற உண்மையான ஜனநாயக இயக்கம் திமுக - மு.க.ஸ்டாலின்

0 192

வெற்றி, தோல்வியை கடந்து தேர்தலை நாடி எதிர்கொள்கின்ற உண்மையான ஜனநாயக இயக்கம் திமுகதான் என்று அக்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, "உள்ளாட்சிக் களம் அழைக்கிறது, நல்லாட்சி அமைக்கும் நம்பிக்கை தழைக்கிறது" என்ற தலைப்பில் திமுகவினருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், ஜனநாயக ரீதியிலான தேர்தல் களத்தில், தி.மு.க. என்றைக்குமே மக்களைச் சந்திக்கத் தவறியதுமில்லை, தயங்கியதுமில்லை எனத்  தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சியில் உள்ளாட்சி அமைப்புக்காக எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளை பட்டியலிட்டுள்ள அவர், நாடாளுமன்றத் தேர்தல் கள வெற்றிப் பரிசும், இடைத்தேர்தல் கள கசப்பான பாடமும் மறக்க முடியாதவை; மறக்கக் கூடாதவை என்று கூறியுள்ளார். 

Watch Polimer News Online: https://polimernews.com/dlive-tv

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments