BIG STORIES
நிதானமிழந்த ஆட்டோ ஓட்டுனர்.. பெண்களிடம் வீரம் காட்டியதால் வன்கொடுமை வழக்கு பாய்ந்தது ..! செருப்பால் அடித்ததால் பெண் மீதும் வழக்கு
Jul 22, 2025 12:49 AM
200
சென்னையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பெண் நிர்வாகியை தாக்கிய புகாரில் ஆட்டோ ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர். பெண் பயணிகளிடம் ஆத்திரப்பட்ட ஆட்டோ ஓட்டுனர் சிறைக்கு சென்ற பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..
மக்கள் நீதி மய்யம் கட்சியில் மாநில மகளிர் அணி செயலாளராக இருப்பவர் சினேகா மோகன் தாஸ். இவர் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இயங்பவர்.
திங்கட்கிழமை காலை சினேகா மோகன் தாஸ் அவரது வடமாநில தோழி ஒருவருடன் திநகரில் இருந்து மாநிலக் கல்லூரியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க புறபட்டுள்ளார். உபர் செயலி மூலமாக 170 ரூபாய்க்கு ஆட்டோ ஒன்றை புக் செய்துள்ளார்.
ஆட்டோவில் இருவரும் பயணித்து வந்த போது, அந்த ஆட்டோ ஓட்டுனர் கூகுள் மேப்பை ஆப் செய்துவிட்டு , ஆட்டோவை அதிவேகமாக ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து சினேகா மோகன் தாஸ் ஆட்டோ ஓட்டுனரிடம் கேட்டபோது 170 ரூபாய்க்கு அப்படி தான் செல்ல முடியும் எனவும் மிகவும் ஆபாசமாக கூறியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த் சினேகா மோகன் தாஸ் அந்த ஆட்டோ ஓட்டுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் சாந்தோம் அருகே ஆட்டோவை நிறுத்தி கீழே இறங்குமாறு ஒருமையில் ஆட்டோ ஓட்டுனர் பேசியதாக தெரிகிறது.
உடனடியாக சினேகா மோகன் தாஸ் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்தார். வாக்குவாதம் முற்றிய நிலையில் போலீசார் வருவதை பார்த்ததும், ஆட்டோவை கிளம்ப முயன்றார். இதனால் ஆட்டோவில் இருந்த சாவியை எடுக்க முயன்ற போது அந்த ஆட்டோ ஓட்டுனர் , சினேகா மோகன் தாஸை கழுத்தில் தாக்கியதாக தெரிகிறது.
இதனால் மேலும் கோபம் அடைந்த சினேகா மோகன் தாஸ் கைகளாலும், செருப்பாலும் அந்த ஆட்டோ ஓட்டுநரை தாக்கினார், அந்த வழியாக வந்தவர்களும் பெண்ணை எப்படி அடிப்பாய் என்று ஆடோ ஓட்டுனரை அடித்தனர். அங்கு வந்த போலீஸ் காரர் தடுத்து நிறுத்தி, ஆட்டோ ஓட்டுநரை விசாரணைக்கு அழைத்து சென்றார்
சினேகா மோகன் தாஸ் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் ஆட்டோ ஓட்டுனரின் பெயர் பிரசாத் என்பதும் அவரது தாய் வங்கி ஒன்றில் அதிகாரியாக இருப்பதும் தெரியவந்தது. காயமடைந்த சினேகா மோகன் தாஸ் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார்
தனது உடை குறித்தும் ஊரு விட்டு ஊரு வந்து பேசுகிறீர்களா ?எனவும் மிகவும் அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தி ஆட்டோ ஓட்டுனர் பேசியதாகவும், இது மட்டுமின்றி தன்னை தாக்கியதால் தான் பதிலுக்கு தாக்கியதாகவும் அவர் தெரிவித்தார்.
தங்களுக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண பெண்களுக்கு எங்கே பாதுகாப்பு உள்ளது ?என கேள்வி எழுப்பினார். உபர் ஆன்லைன் செயலி நிறுவனங்கள் ஆட்டோ வைத்திருப்பவர்கள் எல்லாம் வாகனங்கள் இயக்க அனுமதி கொடுப்பதாகவும் பெண்களுக்கு பாதுகாப்பு குறித்து எந்த நிறுவனங்களும் யோசிக்கவில்லை எனவும் இந்த கட்டுப்பாடுகள் எல்லாம் விதிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
அதே நேரத்தில் ஆட்டோ ஓட்டுனரை தாக்கிய புகாரில் சினேகா மோகன் தாஸ் மீது தாக்குதல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு செய்து மைலாப்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பெண்களிடம் பேசும் போது கனிவுடனும், நிதானமாகவும் பேசி இருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காது என்றும் ஆட்டோ ஓட்டுனர் பிரசாத்தின் ஆத்திரம் அவரை வன்கொடுமை வழக்கில் சிக்க வைத்து விட்டது என்று போலீசார் தெரிவித்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu