புத்துணர்வு முகாமுக்கு செல்லும் யானைகள்

0 271

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடைபெறும் புத்துணர்வு முகாமுக்கு தமிழகத்தின் பல இடங்களில் இருந்து யானைகள் அழைத்துச் செல்லப்பட்டன.

இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கோயில்களில் உள்ள யானைகளுக்கு தமிழக அரசு ஆணைப்படி கோயம்புத்தூர் மாவட்டம் தேக்கம்பட்டியில் ஆண்டுதோறும் புத்துணர்வு முகாம் நடத்தப்படுகிறது.

கோயில் யானைகளின் உடல் மற்றும் மனம் சார்ந்த உளைச்சலைப் போக்குவதையும் அவற்றிற்கு ஓய்வு மற்றும் மருத்துவ கவனம் அளிப்பதையும் நோக்கமாக கொண்டுள்ள இந்த முகாமில், கோயில் யானைகளுக்கு நடைபயிற்சி, குளியல், சமச்சீர் உணவு, மருத்துவ பராமரிப்பு உள்ளிட்டவை அளிக்கப்படும்.

48 நாட்கள் நடைபெறும் இந்த முகாமில் பங்பேற்பதற்காக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் யானை பார்வதி, லாரி மூலம் புத்துணர்வு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் யானையுடன் பாகன், கால்நடை மருத்துவர் உட்பட 3 பேர் கொண்ட குழுவினர் உடன் சென்றனர்.

மதுரை

அதே போல் மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவில் யானை தெய்வானையும் புத்துணர்வு முகாமுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.  

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயில் யானை கஸ்தூரி, 13 ஆவது முறையாக புத்துணர்வு முகாமில் பங்கேற்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் நாளை தொடங்கும் புத்துணர்வு முகாமில் பங்கேற்க 54 வயதாகும் யானை கஸ்தூரி, லாரி மூலம் கொண்டு செல்லப்பட்டது.அனுப்பிவைக்கப்பட்டது.

நாகை

நாகை மாவட்டம் மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் யானை அபயாம்பாள், திருக்கடையூர் கோவில் யானை அபிராமி, உப்பிலியப்பன் கோவில் யானை பூமா புத்துணர்வு முகாமுக்கு லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. முன்னதாக யானைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

Watch Polimer News Online: https://polimernews.com/dlive-tv

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments