அஸ்ஸாம் திரிபுராவில் அமைதி நிலை திரும்புகிறது

0 309

அஸ்ஸாம் மற்றும் திரிபுராவில் படிப்படியாக இயல்பு நிலை திரும்பிக் கொண்டிருக்கிறது. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் கடந்த திங்கட்கிழமை தொடங்கி 5 நாட்களாக வன்முறை தலைவிரித்தாடியது.

இந்த கலவரம் டெல்லி, பீகார், உத்தரப்பிரதேசத்தின் சில பகுதிகளுக்கும் கேரளாவிலும் பரவியது. வன்முறையைக் கட்டுப்படுத்த ராணுவமும் துணை ராணுவமும் குவிக்கப்பட்டுள்ளன. இணைய சேவையை அரசு முடக்கியுள்ளது.

மேற்கு வங்கத்தில் போராட்டக்காரர்கள் சாலை மற்றும் ரயில்களை மறித்து போராட்டம் நடத்தினர். கார்கள், இருசக்கர வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. பெல்டங்கா ரயில் நிலையத்திற்கு வன்முறையாளர்கள் தீ வைத்தனர்.

மூன்று நாட்கள் வன்முறைப் போராட்டங்களுக்குப் பின்னர் திரிபுராவில் இன்று அமைதி திரும்பியுள்ளது.
போராட்டம் காரணமாக வடகிழக்கு மாநிலங்களின் 47 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Watch Polimer News Online :https://www.polimernews.com/dlive-tv

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments