மத சிறுபான்மையினரின் உரிமைகளை இந்தியா பாதுகாக்க வேண்டும் - அமெரிக்கா

0 352

இந்தியா தனது அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக விழுமியங்களுக்கு ஏற்ப மத சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என அமெரிக்கா கூறியுள்ளது.

வாஷிங்டன் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர், ‘குடியுரிமை சட்டத் திருத்த மசோதா தொடர்பான விவகாரங்களை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது என்றார்.

மத சுதந்திரத்திற்கான மரியாதை மற்றும் சட்டத்தின் கீழ் அனைவரையும் சமமாக பாவித்தல் ஆகியவை அமெரிக்கா மற்றும் இந்தியா என்ற இரு ஜனநாயக நாடுகளின் அடிப்படைக் கொள்கைகள் என்று அவர் கூறினார்.

அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக விழுமியங்களுக்கு ஏற்ப தனது நாட்டின் மத சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க இந்தியாவை அமெரிக்கா வலியுறுத்துவதாக அவர் தெரிவித்தார்.

Watch Polimer News Online : https://www.polimernews.com/dlive-tv

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments