காதல் முறிவு.. 31 இடங்களில் கத்தியால் குத்தி பெண் கொலை..!

0 537

30 வயது இளைஞருக்கு 40 வயது பெண்ணுடன் ஏற்பட்ட காதல் முறிந்ததால், ஏற்பட்ட ஆத்திரத்தில், அந்த பெண்ணை கழுத்து உள்ளிட்ட 31 இடங்களில் கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் கொல்லம் அருகே நடந்துள்ளது. கணவர் வெளிநாட்டு வேலைக்கு சென்று விட தடம் மாறிய பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.. 

கேரள மாநிலம் கொல்லத்தை அடுத்த அஞ்சுமுக்கு பகுதியை சேர்ந்த ஷெரீப் என்பவரின் மனைவி ஷைலா. கணவர் ஷெரீப் வெளி நாட்டில் வேலைபார்த்து வரும் நிலையில் 40 வயதான ஷைலாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த 30 வயதான அனீஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

கணவன் கட்டிக்கொடுத்த வீட்டில் இரு குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்த ஷைலாவுக்கும், லாரி ஓட்டுனரான அனீஷுக்கும் ஏற்பட்ட பழக்கம் நெருக்கமான காதல் ஆனது. இதனை அறிந்த உறவினர்கள் எச்சரித்தும் ஷைலா கேட்காமல் அனீஷுடன் சுற்றியுள்ளார்.

இந்த நிலையில் காதலை கைவிட மறுத்த மனைவி ஷைலாவை விவாகரத்து செய்ய ஷெரீப் முடிவெடுத்தார். இதையடுத்து திருந்திவாழ முடிவு செய்த ஷைலா, அனீஸ் உடனான தனது காதலை முறித்துக் கொண்டார்.

அனீஷ், பலமுறை செல்போனில் பேச முயன்றும் தனது இரு குழந்தைகளுக்காக ஷைலா தனது முடிவில் உறுதியாக இருந்தார். இதையடுத்து ஆத்திரம் அடைந்த காதலன் அனீஷ், சம்பவத்தன்று பள்ளியில் மகளை விட்டு வீடு திரும்பிய ஷைலாவை வழி மறித்து கழுத்து, மார்பு தோள்பட்டை என 31 இடங்களில் சரமாரியாக கத்தியால் குத்தினான். இதில் ரத்த வெள்ளத்தில் ஷைலா மயங்கி சரிந்தார்.

அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் ஷைலாவை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு ஷைலாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து கத்தியுடன் சுற்றிய கொலையாளி அனீஷை காவல்துறையினர் கைது செய்தனர்.

தன் மனைவி குழந்தைகள் வசதியான வாழ்க்கை வாழ்வதற்காக, சொந்தங்களை பிரிந்து அந்நிய தேசத்தில் கடுமையாக உழைக்கும் கணவனுக்கும், பெற்றெடுத்த குழந்தைகளுக்கும் உண்மையாக இல்லாமல், கயவனை., காதலன் என நம்பி தடம் மாறிச்சென்றால்., என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த கொலை சம்பவம் ஒரு உதாரணம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments