சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை உயர்வு

0 476

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்துள்ளது.

சென்னையில் நேற்று 3597 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிராம் ஆபரண தங்கம், இன்று 5 ரூபாய் உயர்ந்து 3602 ரூபாய்க்கு விற்பனையானது. இதே போன்று நேற்று 28,776 ரூபாய்க்கு விற்பனையான ஒரு சவரன் தங்கம் 40 ரூபாய் உயர்ந்து, 28,816 ரூபாய்க்கு விற்பனையானது.

தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் இன்று உயர்த்தப்பட்டுள்ளது.நேற்று 46 ரூபாய் 60 காசுகளுக்கு விற்பனையான ஒரு கிராம் வெள்ளி, 30 காசுகள் உயர்ந்து, 46 ரூபாய் 90 காசுகளுக்கு விற்பனையானது. இதே போன்று நேற்று 46,600 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ வெள்ளி, இன்று 300 ரூபாய் உயர்ந்து 46,900 ரூபாய்க்கு விற்பனையானது. 

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது. இதன் எதிரொலியாக உள்ளூரிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் உண்டாவதாக வியாபாரிகள் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments