திருச்சி என்ஐடி உலகளாவிய முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வு

0 163

திருச்சி என்.ஐ.டி- யின் உலகலாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சென்னையில் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.

திருச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் கல்வி நிறுவனமான என்.ஐ.டி (NIT), 1969ஆம் ஆண்டு முதல் பல்வேறு பிரிவுகளில் பொறியியல் மாணவர்களை உருவாக்கி வருகிறது.

அக்கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்கள் உலகம் முழுவதும் மிகப்பெரிய தொழில் அதிபர்களாகவும், பல்வேறு பெரிய நிறுவனங்களில் உயர் அதிகாரிகளாகவும் தற்போது பணியாற்றி வருகின்றனர்.

அவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் நிகழ்வாக ஜனவரி 4ம் தேதி சென்னை எம்ஜிஎம்-இல் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். அப்போது முன்னாள் மாணவர்களின் பங்களிப்புடன் கல்லூரியின் வளர்ச்சிக்காக 12 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments