உன்னாவா வழக்கில் 16 ஆம் தேதி தீர்ப்பளிக்கிறது டெல்லி நீதிமன்றம்

0 293

உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவில் இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக எம்எல்ஏ கைது செய்யப்பட்ட வழக்கில் வரும் 16 ஆம் தேதி தீர்ப்பளிக்க இருப்பதாக டெல்லி நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு 17 வயது சிறுமியை கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் பாஜக எம்எல்ஏவாக இருந்த குல்தீப் சிங் செங்கார் கைது செய்யப்பட்டார்.

இந்த விவகாரம் விஷ்வரூபம் எடுத்ததை அடுத்து குல்தீப் செங்கார் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார். அந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டடு, குல்தீப் சிங் செங்கார் மற்றும் சசிசிங் ஆகியோர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து தீர்ப்பை வரும் 16 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து டெல்லி நீதிமன்ற நீதிபதி தர்மேஷ் ஷர்மா உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments