ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரவு நேரத்தில் எத்தனை மருத்துவர்கள் பணிபுரிகின்றனர்? சுகாதாரத்துறை செயலர் பதில் தாக்கல் செய்ய உத்தரவு

0 230

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரவு நேரங்களில் எத்தனை மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுனர்கள் பணியில் உள்ளனர் என்பது குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து சிவகங்கையை ரமேஷ் குமார் என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த வழக்கு, நீதிபதிகள் துரைசுவாமி, கிருஷ்ணவள்ளி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரவு நேரங்களில் எத்தனை மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுனர்கள் பணியில் உள்ளனர் என்பது குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி முதல் வாரத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments