பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை 21 நாள்களில் தண்டிக்க சட்டம் கொண்டுவரப்படும் - ஜெகன் மோகன் ரெட்டி

0 561

ஆந்திராவில் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை 21 நாள்களில் தண்டிக்கும் வகையில், சட்டம் கொண்டு வரப்படும் என்று முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உறுதியளித்துள்ளார்.

இதுகுறித்து ஆந்திர சட்டப்பேரவையில் பேசிய அவர், ஐதராபாத்தில் பாலியல் வன்கொடுமையில் தொடர்புடைய 4 பேர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதை சுட்டிக்காட்டி, தெலங்கானா முதலமைச்சரையும், காவல்துறையையும் பாராட்டினார்.

அதேநேரத்தில், இந்த சம்பவத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தை விமர்சித்த அவர், பாலியல் இணையதளங்கள் முடக்கப்பட்ட போதிலும், அத்தகைய படங்களை மக்கள் பார்ப்பதை கட்டுப்படுத்த முடியவில்லை என்றும், ஆந்திர அரசின் புதிய மசோதாவில் இப்பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் என்றும் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments