பேருந்துகளில் பயணிகள் இறங்கும் இடத்தை அறிவிக்கும் கருவி முதல்கட்டமாக 50 பேருந்துகளில் பொருத்தப்பட்டது

0 320

சென்னை மாநகரப் பேருந்துகளில், பயணிகள் இறங்கும் இடம் தொடர்பான அறிவிப்புகளை வெளியிடும் கருவி,  முதல்முறையாக 50 பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ளது.

ஜி.பி.எஸ்.(GPS) மூலம், தானியங்கி முறையில் இயங்கும் இந்தக் கருவி, பயணிகள் இறங்கும் இடம் நெருங்கியதும், 100 மீட்டருக்கு முன்னதாகவே இடத்தின் பெயருடன் அறிவிப்பை வெளியிடும்.

வெளியூர் பயணிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமையும் என கூறப்படுகிறது. அண்ணா சதுக்கம், பூந்தமல்லி வழித்தடத்தில் இயக்கப்படும் 25 ஜி, பூந்தமல்லி - திருவொற்றியூர் இடையே இயக்கப்படும் 101 மற்றும் பிராட்வே-கேளம்பாக்கம்  வழித்தடத்தில் இயக்கப்படும் 570 ஆகிய தடம் எண் கொண்ட பேருந்துகளில் இந்த கருவி முதல்கட்டமாக பொருத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே மெட்ரோ ரயில்களில் இந்த நடைமுறை பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments