சபரிமலை ஐயப்பன் சன்னதியில் குறைந்த அளவில் பக்தர் கூட்டம்

0 205

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று பக்தர்கள் கூட்டம் குறைந்து காணப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோவில் நடை, கடந்த மாதம் 16-ந்தேதி திறக்கப்பட்டது.

நடை திறக்கப்பட்ட நாளில் இருந்தே சபரிமலையில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. இதனால் சாமி தரிசனம் செய்ய 7 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருக்க வேண்டியநிலை ஏற்பட்டது.

இந்தநிலையில், இன்று காலை முதல், பக்தர்களின் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. 18 ஆம் படிகளில் கூட்ட நெரிசல் இன்றி, எளிதாக சென்று சுவாமி தரிசனம் செய்ய முடிந்ததாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments