அமெரிக்காவில் இருந்து வாங்கிய நவீன பீரங்கியை பரிசோதித்தது இந்திய ராணுவம்...

0 613

அமெரிக்காவிடம் இருந்து வாங்கப்பட்ட சக்தி வாய்ந்த குண்டுகள் மற்றும் நவீன பீரங்கியைக் இந்திய ராணுவம் சோதனை செய்துள்ளது. 

அமெரிக்காவிடம் இருந்து கூடுதல் தொலைவு சென்று தாக்கும் வெடிகுண்டுகளை இந்திய ராணுவம் அண்மையில் வாங்கியது. அந்த குண்டுகளை அமெரிக்காவின் எம் 777 என்ற நவீன ரக பீரங்கிகள் மூலம் ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் இந்திய ராணுவம் வெடிக்கச் செய்து சோதித்து பார்த்தது.

லெப்டினன்ட் ஜெனரல் ரவி பிரசாத் உள்ளிட்ட ராணுவ உயரதிகாரிகள் கண்காணிப்பில் சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்777 பீரங்கி மூலம் 30 கிலோ மீட்டர் வரையிலான இலக்கையும் குறி பார்த்து தாக்குதல் நடத்த முடியும். ஒரு நிமிடத்தில் 5 ரவுண்டுகள் தாக்குதல் நடத்தலாம்.

எடை குறைவு என்பதால் மலைப்பாங்கான இடத்திலும் எளிதாக பீரங்கியை கொண்டு செல்ல முடியும் என்பதுடன், ஹெலிகாப்டர் மூலம் தேவைப்படும் இடத்திற்கு எடுத்துச் சென்று தாக்க முடியும். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments