டெல்லியில் நேற்று தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் இன்று மீண்டும் தீ

0 244

டெல்லியில், நேற்று 43 பேரை காவு வாங்கிய தீ விபத்து நேரிட்ட இடத்திலேயே, இன்று, காலையில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது.

டெல்லியின் வடக்குப்பகுதியில், ராணி ஜான்சி சாலையில், அனாஜ் மண்டி என்ற சந்தை பகுதி உள்ளது. இங்கு, பல அடுக்குமாடிகளை கொண்ட தொழிலகம் ஒன்றில், நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், ஒப்பந்த தொழிலாளர்கள் 43 பேர், உடல் கருகியும், மூச்சுத் திணறியும் உயிரிழந்தனர். 60க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

மின்கசிவு காரணமாக இந்த கோர தீ விபத்து நடைபெற்றதாக, முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. உரிய அனுமதி பெறாமல் தொழிலகத்தை நடத்தி வந்தவரும், கட்டிட உரிமையாளருமான ரேஹான், மேலாளர் ஃபர்ஹான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இன்று காலை, அதே கட்டிடத்தில், தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, 4 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்புத்துறையினர், தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். அருகிலிருந்த கட்டிடங்களுக்கு தீ பரவாமல் தடுக்கும் பணியில், தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டிருக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments