வெங்காயம் விலை 20 நாட்களில் குறையும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

0 443

தமிழகத்தில் 15 லிருந்து 20 நாட்களுக்குள் வெங்காயத்தின் விலை குறையும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்திருக்கிறது என்றும் அதிமுக இதில் கண்டிப்பாக வெற்றிபெறும் என்றும் கூறினார். உள்ளாட்சித் தேர்தல் குறித்து திமுக தலைவர் மு..க.ஸ்டாலின் பொத்தாம் பொதுவாக குறைகளை கூறி வருகிறார் என்றும் எந்த வார்டில் பிரச்சனை, இட ஒதுக்கீட்டில் என்ன மாதிரியான குறை என்பதை தெளிவாக அவர் சுட்டிக்காட்ட வேண்டும் என்றும் முதலமைச்சர் வலியுறுத்தினார். 

அண்டை மாநிலங்களில் மழை பாதிப்பால் விளைச்சல் குறைந்து, வரத்து குறைந்ததால் வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளதாகக் கூறிய முதலமைச்சர், தமிழகத்தில் பயிரிடப்பட்டுள்ள வெங்காயம் 15 லிருந்து 20 நாட்களுக்குள் சந்தைக்கு வரும் என்பதால் அதன் விலை குறையும் என்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments