இரவு நேரத்தில் பெண்கள் பாதுகாப்பாக வீடு செல்ல பஞ்சாப், தெலங்கானாவைத் தொடர்ந்து கர்நாடக போலீசார் நடவடிக்கை

0 397

பஞ்சாப், தெலங்கானாவைத் தொடர்ந்து, இரவு நேரத்தில் பெண்கள் பாதுகாப்பாக வீடு திரும்ப உதவும் சேவையை கர்நாடகா போலீசார் தொடங்கியுள்ளனர்.

தெலங்கானாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து  கொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, தெலங்கானாவில் இரவு நேரத்தில் பெண்கள் பாதுகாப்பாக வீடு திரும்ப உதவுவதற்காக, அம்மாநில காவல்துறை வாகன சேவையை இலவசமாக செய்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து கர்நாடகாவிலும் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, இரவு 10 மணியில் இருந்து, காலை 6 மாணி வரை, பெண்கள் காவல்நிலையத்திற்கு தொடர்புகொண்டால் அவர்கள், காவல் வாகனத்தில் அழைத்துச்சென்று பத்திரமாக வீடுகள் அல்லது அவர்கள் செல்லவேண்டிய இடங்களில் விடப்படுவார்கள்.

வாகனமின்றி தவிக்கும் பெண்கள், எந்த காவல் நிலையத்திலும் தொடர்புகொள்ளலாம் என்றும், இதற்காக கட்டணமில்லா தொலைபேசி சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments