பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோருக்கு என்கவுன்ட்டர் காத்திருக்கிறது - தெலங்கானா அமைச்சர் எச்சரிக்கை

0 350

தெலங்கானாவில் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட கொடிய குற்றத்தில் ஈடுபடுவோருக்கு போலீஸாரின் என்கவுன்ட்டர் காத்திருப்பதாக அந்த மாநில அமைச்சர் தலசானி ஸ்ரீநிவாஸ் யாதவ் ((Talasani Srinivas Yadav))எச்சரித்துள்ளார்.

ஐதராபாத் அருகே கால்நடை பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற 4 பேர், போலீசாரால் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர். இதுகுறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஸ்ரீநிவாஸ் யாதவ், கொடிய குற்றத்தில் ஈடுபட்டுவிட்டு நீதிமன்றத்தில் சிறை தண்டனையும், பின்னர் தொடர்ச்சியாக ஜாமீனும் பெற்று யாரும் தப்பிக்க முடியாது என்றார். அக்குற்றத்தில் ஈடுபடுவோரை என்கவுன்ட்டர் செய்யும்படி குறிப்பு அனுப்பப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments