அருண் சோரியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் பிரதமர் மோடி

0 347

உடல்நிலை பாதிக்கப்பட்டு புனே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் மத்திய அமைச்சர் அருண் சோரியை பிரதமர் மோடி நேரில் சந்தித்து உடல்நிலை விசாரித்தார்.

78 வயதாகும் அருண் சோரிக்கு கடந்த 1ம் தேதி இரவு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து புனேயிலுள்ள ரூபி ஹால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், புனேயில் அவரை மோடி நேரில் சந்தித்தார்.

பின்னர் அருண் சோரியுடனான சந்திப்பு குறித்து ட்விட்டரில் மோடி பதிவுகளை வெளியிட்டார். அதில் சோரியுடனான சந்திப்பு சிறப்பாக இருந்ததாகவும், அவர் நீண்ட காலம் ,ஆரோக்கியமாக வாழ பிரார்த்திப்பதாகவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments