திருப்பதியில் லட்டுக்கான பூந்தி தயாரிக்கும் சமையல் அறையில் தீ விபத்து

0 514

திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவில் அருகே உள்ள லட்டு செய்யும் பூந்தி சமையல் அறையில் நேரிட்ட தீவிபத்து, 15 நிமிடத்தில் அணைக்கப்பட்டது.

ஏழுமலையான் கோவில் இடதுபுறம் இருக்கும் அந்த பூந்தி சமைக்கும் அறையில் இன்று ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென தீ விபத்து நேரிட்டது. இதனால் அந்த அறையின் மேல் பகுதி வரை தீ மளமளவென கொழுந்து விட்டு எரிந்தது.

இதுகுறித்த தகவலின்பேரில் 2 தீயணைப்பு வண்டிகளுடன் வந்து வீரர்கள் 15 நிமிடத்தில் தீயை அணைத்தனர். விபத்துக்கு புகை செல்லும் குழாயில் படிந்திருந்த நெய் திட்டுகளில் தீ பற்றியதே காரணமென்றும், இதில் யாருக்கும் பாதிப்பு இல்லை எனவும் தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments